Suganthini Ratnam / 2017 ஜனவரி 03 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் 25 விவசாயிகளின் காணிகளை மீள ஒப்படைப்பதற்கு அப்பிரதேச செயலாளர் முன்வந்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், நேற்றுத் (03) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, 'பதுளை வீதியை அண்டிய பல கிராமங்களில் பூர்வீகமாக வாழ்ந்து பயிர்ச் செய்கையிலும் நெற்செய்கையிலும் ஈடுபட்டுவந்த விவசாயிகள், அசாதாரண சூழ்நிலை காரணமாக 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தனர்.
இந்த விவசாயிகளின் சொர்ணபூமி உறுதிப்பத்திரங்களைக் கொண்ட சுமார் 1,500 ஏக்கர் காணிகள், மேய்ச்சல்தரை என்ற பேரில்; அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டிருந்தன.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பயனாகச் காணிகளை இழந்த விவசாயிகளின் காணிகளை மீளக் கையளிப்பதற்குப் பிரதேச செயலாளர் முன்வந்துள்ளார். கடந்த 30 வருடங்களாக காணியையும் வாழ்வாதாரத்தையும் இழந்த விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சி தரும் விடயமாகும்.
மேற்படி விவசாயிகளிடம் காணி உரித்துக்கான சொர்ணபூமி உறுதிப்பத்திரங்கள், காணி ஒப்பம், வருடாந்தம் புதுப்பிக்கும் மற்றும் வரி செலுத்தும் ஆவணங்கள் உள்ளன' என்றார்.
அவ்வாறே, ஏறாவூர்ப்பற்றில் பதுளை வீதியை அண்டிய பகுதிகளில் காணிகளை இழந்துள்ள ஏனைய விவசாயிகளின் மீதிக் காணிகளையும் விடுவிப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
25 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago