Suganthini Ratnam / 2016 ஜூலை 03 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதில் மதத்; தலைவர்கள் சிறப்பாகச் செயற்பட முடியும் என தேசிய சமாதானப் பேரவையின் செயற்றிட்ட அதிகாரி எஸ்.கிருபாகரன் தெரிவித்தார்.
'மதங்கள் மற்றும் இனங்களுக்கு இடையில் வேறுபாடுகளைக் களைவதற்கான நல்லிணக்கத்தைக் காணுதல்' எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு, தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு, கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் சனிக்கிழமை (02) நடைபெற்றது.
மதத் தலைவர்களும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களுமாக சுமார் 35 பேர் பங்குபற்றிய இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'மத, இன வேறுபாடுகளைக் களைந்து சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதில் மதத் தலைவர்களின் பங்கு இன்றியமையாததாக இருப்பதால், நல்லாட்சி அரசாங்கமும் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் பிளவுபட்டுப் போன சமுதாயத்தை மீண்டும் ஒருங்கிணைத்து ஐக்கியத்தை வலுப்படுத்துவதற்கு மதத் தலைவர்கள் கைகொடுக்க வேண்டும்' என்றார்.
'எனவே, இதற்கான பொறிமுறையை நாட்டின் பல பாகங்களிலும் உருவாக்கிச் செயற்பட வேண்டிய தேவை உள்ளது.
மக்களுக்கும் சமாதான வழிமுறைகளுக்கும் ஏற்றதொரு சிறந்த களமாக சர்வமத மற்றும் சர்வ இனப்பேரவை இருக்கும் என்று நம்புகின்றோம்.
நிலைமாற்று நீதி சம்பந்தமான தெளிவான விடயத்தையும் தற்போதைய நல்லாட்சிக் காலத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும்.
தேசிய சமாதானத்துக்காக சமாதானம் மற்றும் சர்வ இன நல்லிணக்கத்துக்கான சர்வமத சமூகங்களுக்கு இடையில் ஒருமைப்பாட்டை வலுவூட்ட வேண்டும்.
சகோதரத்துவ மத போதனைகள் மூலம் சமூக இணக்கப்பாட்டுக்கு பாரிய பங்களிப்பை பெற்றுக்கொடுக்க முடியும்' என்றார்.
'சமூகங்களுக்கு இடையில்; அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் பாரிய அளவிலான இன, மத மோதல்களுக்கு வித்திடுகின்றன.
மாவட்ட மட்டத்தில் உருவாக்கப்படும் மத, இன ஐக்கிய பேரவை உள்ளூரில் ஏற்படும் மத, இன முரண்பாடுகளை ஆழமாக ஆராய்ந்து அவற்றைப் புரிந்துணர்வுடன் அணுகுவதற்கு வழி செய்ய முடியும். அதன் அடிப்படையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இத்தகைய முரண்பாடுகளை நீக்கவும் புரிந்துணர்வை உருவாக்கவும் மாவட்ட அடிப்படையில் சர்வமதப் பேரவையின் செயற்பாடுகளை மென்மேலும் உறுதிப்படுத்துவது மிகவும் அவசியமானது என்று தேசிய சமாதானப் பேரவை கருதுகிறது' எனவும் அவர் மேலும் கூறினார்.


23 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
9 hours ago