2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'ஒத்துழைப்பின் மூலமே சாத்தியமாகும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

புள்ளிவிபரங்களானவை நாட்டின் முக்கியத்துவம் மிக்க அனைத்து விடயங்களுக்கும் பங்களிப்புச் செய்கின்றன. எனவே மக்கள் அனைவரும் தொகை மதிப்பீடுகளின் போது வழங்கும் ஒத்துழைப்பின் மூலமே இது சாத்தியமாகும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

'சரியான தரவுகள் ஊடாக மிகச் செழிப்பானதொரு வாழ்க்கை' எனும் தொனிபொருளில்நேற்று செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற உலக புள்ளிவிபர தின மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தொகை மதிப்பின் போது வீடுகளுக்கு புள்ளிவிபர உத்தியோகத்தர்கள் செல்கையில் மக்கள் அவர்களைப் பயத்துடன் எதிர் கொள்ளும் நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

புள்ளி விபரங்களின் முக்கியத்துவத்தினை புள்ளிவிபர உத்தியோகத்தர்கள் சரியான முறையில் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதுடன், உத்தியோகத்தர்கள் தங்களது செயற்பாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்காக புள்ளிவிபரங்கள் குறித்து சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். கொள்கை வகுப்பதிலிருந்து புள்ளிவிபரங்கள் அடிப்படைப் பங்கு வகிக்கின்றன. இது குறித்து மக்கள் கொள்ளும் தெளிவே முக்கியத்துவம் பெறுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபை, உலகில் 5 வருடங்களுக்கு ஒரு தடவை புள்ளி விபர தினத்தினை நினைவுகூரும் வகையில் இந்தப்பிரகடனத்தினை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் இதன் முழுப்பயனும் உலகுக்கும் நாட்டுக்கும் எமது மாவட்டத்துக்கும் கிடைக்கவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X