2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'ஒற்றையாட்சி, சமஷ்டிக் கோரிக்கைளை முரண்படாத வகையில் நகர்த்த வேண்டியவர்களாக உள்ளோம்'

Suganthini Ratnam   / 2016 மே 01 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது தென்பகுதியில் முன்வைக்கப்படும் ஒற்றையாட்சி என்ற கோரிக்கையும் தாம் முன்வைக்கும் சமஷ்டி ஆட்சி என்ற கோரிக்கையும் ஆரம்பத்திலேயே முரண்படாத வகையில் நகர்த்திக்கொண்டு செல்ல வேண்டியவர்களாக தாம் உள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
 
கடந்த காலத்தில் அரசியலமைப்பு உருவாக்கும்போது, தமிழ்த் தலைவர்களின் கோரிக்கைகள் ஆரம்பத்திலேயே  நிராகரிக்கப்பட்டன. தற்போது அவர்களின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டு புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கை மலரத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்
 
மட்டக்களப்பு கிரான் கருணா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (30) மாலை நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கிராமிய கலாசார விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'எமது நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஜனவரி 9இல் இங்கு நடந்துள்ளது.

நாங்கள் இதுவரை கோரிக்கொண்டிருந்த புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.  

இனிவரும் காலத்தில்; நாங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். புதிய அரசியலமைப்பு விடயத்தில் அலட்சியம் செய்யக் கூடியவர்களுக்கு இடங்கொடுக்காத வகையிலும் தோல்வி அடையச் செய்கின்றவர்களின் செயற்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்காத வகையிலும் மிக்; கவனமாக செயற்பட வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X