Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 26 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
ஒற்றையாட்சியானது நாட்டைப் பிரிவினைக்கு இட்டுச்செல்ல வழிவகுக்கும். ஆனால், சமஷ்டி ஆட்சி முறையானது நாட்டில் கூட்டாட்சியை ஏற்படுத்தக்கூடியதாக அமையுமென கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி விபுலானந்தா வித்தியாலய மாணவர்களுக்கு திங்கட்கிழமை (25) மாலை பாதணிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'தற்போது புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் ஒற்றையாட்சியா? சமஷ்டியா? என பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. சமஷ்டி ஆட்சி முறை வழங்கினால், நாடு பிரிந்துவிடும்;. தமிழர்கள் இந்தியாவுடன் இணைந்து தனி மாநிலமாக உருவாக்கி விடுவார்கள் என்று பொரும்பான்மைச் சமூகத்தினர் கூறுகின்றனர்.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே இந்தியாவுடன் நாங்கள் தொடர்பைப் பேணி வந்தோம். ஆனால், இந்தியாவுடனோ அல்லது தமிழ்நாட்டுடனோ சேர்ந்து வாழவேண்டுமென்று ஒருபோதும் நினைத்ததில்லை. அந்தக் காலத்தில் இணைய விரும்பாத நாங்கள், இந்தியா பல மாநிலங்களாக இருக்கின்றபோது எதற்காகச் சேரவேண்டும்' என்றார்.
'ஒரே நாட்டுக்குள்ளே அரசியல் தீர்வு என்பது எங்களுடைய கொள்கை. 2009ஆம் ஆண்டுக்கு பின்பு நடைபெற்ற சகல தேர்தல்களிலும் நாங்கள் அதற்கான ஆணையை மக்களிடம் பெற்றுள்ளோம். ஒரே நாட்டுக்குள் எங்களுடைய மொழி, கலாசாரம் வாழ்விடத்தை பாதுகாத்துக்கொள்ளக்கூடிய வகையிலான கூட்டாட்சி எனப்படும்; சமஷ்டி முறையிலான ஆட்சி முறை ஒருபோதும் பிரிவினைக்கு எந்த வகையிலும் இடம்கொடுக்காது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago