Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஒழுக்கமுள்ள மாணவர் சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
காத்தான்குடி பதுரியா முன்பள்ளி பாடசாலையில் நிர்மானிக்கப்பட்ட சுற்று மதிலை இன்று(08) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்,
அனைத்து மாணவர்களுக்கும் கல்வியிலேயே சம வாய்ப்பு கிடைப்பதால் எல்லோரும் படித்தவர்களாக மாறக்கூடிய சந்தர்ப்பம் நிறைய இருக்கிறது.
முன்னர் போல் அல்லாது இன்று நாம் கல்வியிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். இங்கிருக்கின்ற இந்த குழந்தைகள் இன்னும் பல வருடங்களில் வைத்தியர்களாகவோ பொறியியலாளர்களாகவோ இன்னும் வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாகவோ உருவாக இருக்கிறார்கள்.
எங்களது பிள்ளைகள் கல்வியில் முன்னேற வேண்டும். அது மாத்திரமல்ல, இங்கிருக்கின்ற பிள்ளைகள் நல்லதோர் பிரஜைகளாக மாற்றுவதற்கான ஓர் முதற்கட்ட நடவடிக்கையாக நாங்கள் இதனைப்பார்க்க வேண்டும்.
பெற்றோர்கள் இன்று செய்யும் தியாகம் நாளை உங்கள் பிள்ளைகளை நல்லதோர் நிலைக்கு கொண்டு சேர்க்கும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
43 minute ago
51 minute ago