Suganthini Ratnam / 2016 ஜூன் 21 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஓட்டமாவடிப் பாலத்தை அண்டியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன மீன்சந்தைக் கட்டடத்தொகுதி நாளை புதன்கிழமை மாலை நான்கு மணிக்கு திறந்துவைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.
கிழக்கின் பிரதான மீன்பிடி நகர்களான அருகருகே அமைந்துள்ள வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடியில் மீன்சந்தைக் கட்டடத்தொகுதி இல்லாமை குறையாக இருந்துவந்தது.
இந்நிலையில், நெல்சிப் திட்டத்தின் கீழ் 18.57 மில்லியன் ரூபாய் செலவில் 31 கடைத்தொகுதிகளைக் கொண்டதாக நவீன மீன்சந்தைக்கான கட்டட நிர்மாணப் பணி, 2014ஆம் ஆரம்பிக்கப்பட்டது என கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைச் செயலாளர் எஸ்.எம்.எம்.ஸாபி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

25 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
9 hours ago