Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ், எஸ்.பாக்கியநாதன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கூட்டு ஒப்பந்தம் என்பது தொழிலாளர்களின் அடிமைச்சாசனம் இல்லை. உழைப்புக்கு ஏற்ற வகையில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் குணசீலன் சௌந்தரராஜன் தெரிவித்தார்.
மலையகத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி நடத்தப்படும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு நகரில் காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'மலையகத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அவர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கை நியாயமானதும் ஆகும்.
மலையகத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,000 ரூபாயாக வழங்கப்பட வேண்டும். நியாயமான கோரிக்கை, காலத்துக்கு காலம் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, ஏனைய விடயங்களைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடுவது ஆகியன வழமை ஆகும். கடந்த கால கூட்டு ஒப்பந்தங்களில் மூலம் போதுமான சம்பள உயர்வு வழங்கப்பட்டதாக வரலாறு இல்லை.
மலையகத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கின்ற வேலையை எவரும் செய்யக்கூடாது' என்றார்.
'ஈரோஸ் ஜனநாயக முன்னணியானது 1978ஆம் ஆண்டு முதல்; மலையக மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றது. இந்நிலையில், சம்பள உயர்வுக்காக தற்போது போராடுகின்ற மலையகத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து நாமும்; ஆதரவு வழங்குகின்றோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.

5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025