Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கோட்டா முறையில் பெண்கள் உள்ளூராட்சிமன்றம், மாகாணசபை மற்றும் நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டுமென பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவி சல்மா ஹம்சா தெரிவித்தார்.
யுத்தம் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து ஆரையம்பதிப் பிரதேசத்தில் வசிக்கின்ற 09 பெண்களுக்கு தைய்யல் இயந்திரங்கள் வழங்கும் நடவடிக்கை, அங்கு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இலங்கை அரசியலில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை பெண்களுக்காக இந்த நல்லாட்சி அரசாங்கம் வழங்கியுள்ளது. ஆனால், வெளிநாடுகளைப் போன்று இலங்கையிலும் உள்ளூராட்சிமன்றம், மாகாணசபை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு கோட்டா முறையில் பெண்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இந்த நடைமுறை இலங்கையில் இல்லை. இதை இந்த நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்'; என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago