2025 மே 09, வெள்ளிக்கிழமை

குடிநீர் போத்தல்களை தயாரித்த கம்பனிக்கு அபராதம்

Niroshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

குடிநீர் விற்பனை நிலையத்தில் தூசு படிந்த குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தக நிலையத்துக்கும் குடிநீர் போத்தல்களை தயாரித்த கம்பனிக்கும் தலா 8,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை(28) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள குடிநீர் போத்தல் விற்பனை நிலையம் முற்றுகையிடப்பட்டு அங்கிருந்து 1,640 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த 1,640 குடிநீர் போத்தல்களையும் அழிப்பதற்கான உத்தரவினை பிறப்பித்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராசா,குறித்த குடிநீர் போதல்களை தயாரித்த நிறுவனத்துக்கும் அதனை விநியோகம் செய்த நிறுவனத்துக்கும் தலா 08ஆயிரம் ரூபாய் வீதம் தண்டப்பணம் விதித்ததாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் அமுதமாலன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X