Suganthini Ratnam / 2016 ஜூன் 10 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் வீடு கட்டி குறை வேலைகளுடன் காணப்படும் 375 குடும்பங்களுக்கு தலா 10 சீமெந்து பைக்கட்டுகள் படி வழங்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தெரிவித்தார்.
செங்கலடி கிராம பயனாளிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை சீமெந்து பக்கெட்டுகள் வழங்கிவைக்கப்பட்டபோதே, அவர் இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், 'வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் வீடமைப்பு அதிகார சபையினால் வீடு கட்டி வறுமை காரணமாக பூச்சு வேலை மற்றும் குறைவேலையில் காணப்பட்ட வீடுகளை பூர்த்தி செய்வதற்காக தலா 10 சீமெந்து பக்கெட்டுகள் இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயளானிகளுக்கு வழங்கப்படுகின்றன.
ஏறாவூர்ப்ற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கெனவே 166 குடும்பங்களுக்கு சீமெந்து பக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக 375 தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு மீண்டும் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்கள். முதற்கட்டமாக 125 பயனாளிகளுக்கு தற்போது வழங்கபடவுள்ளன. ஏனைய பயனாளிகளுக்கு எதிர்வரும் வாரங்களில் வழங்கப்படும்' என்றார்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025