2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிண்ணையடியிலுள்ள 3 கோவில்களில் திருட்டு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 15 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

வாழைச்சேனை, கிண்ணையடிக் கிராமத்திலுள்ள 3 கோவில்களில் இன்று (15) அதிகாலை திருட்டு இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாணிக்கப் பிள்ளையார் கோவில், மகா விஷ்ணு கோவில்,  நாகதம்பிரான்  கோவில் ஆகிய கோவில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அவற்றிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.

மாணிக்கப் பிள்ளையார் கோவில், மகா விஷ்ணு கோவில் ஆகிய கோவில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் பணம் திருடப்பட்ட நிலையில், அந்த உண்டியல்கள் வெளியில் வீசப்பட்டுக் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினார்.   

இந்தச் சம்பவம் தொடர்பில் தம்மிடம்; மேற்படி கோவில்களின் நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்த நிலையில், விசாணையை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .