2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'கைதிகள் தொடர்பில் தீபாவளிக்கு முன்னர் நற்செய்தி'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தற்போது அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது. இது தொடர்பான   நல்ல செய்தி அரசாங்கத்திடமிருந்து தீபாவளிக்கு முன்னர் கிடைக்குமென்று எதிர்பார்த்துள்ளதாக தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வாகனேரி கிராம அபிவிருத்தி தொடர்பான கூட்டம், மீனவர் சங்கக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை (27) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஜனவரி 8ஆம் திகதி நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இனங்களுக்கிடையில்; நல்லுறவை ஏற்படுத்தும் நடவடிக்கையை புதிய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில், கடந்த காலத்தில் உயர் பாதுகாப்பு வலயமெனக் கூறி சுவீகரிக்கப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவித்து அரசாங்கம் நல்லலெண்ணத்தை  வெளிக்காட்டுகின்றது' என்றார்.  
 
'கடந்த யுத்த சூழ்நிலை காரணமாக வாகனேரிப் பிரதேச மக்கள் பல வகையிலும் துன்பங்களை அனுபவித்துள்ளனர். இந்தக் கிராமத்துக்குரிய தேவைகளாக முன்வைக்கப்பட்ட குடிநீர், மலசலகூடம் உள்ளிட்ட வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு  உடனடி நடவடிக்கை மேற்கொள்வேன்' எனவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X