Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,கே.எல்.ரி.யுதாஜித்
தமிழ் அரசியல்க் கைதிகளின் விடயம் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அம்முன்னணி இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 'பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்க்; கைதிகள் காலதாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சிறைச்சாலைகளில் அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது கவனத்தை செலுத்துகின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'யுத்தத்தின் ஆரம்ப காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் என்ற அடிப்படையில் ஒருதொகுதி கைதிகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் 20 வருடங்களைத் தாண்டி சிறைகளிலுள்ளனர். பலர் உரிய விசாரணைகள் மற்றும் சாட்சியங்களின்றியும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இது எமது நாட்டின் நீதி வழங்கும் வழிமுறைக்கு முரணானது.
சந்தேகத்தின் பேரில் சிறைக்கைதிகளாக இருப்பவர்கள் சரியான முறையில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கியிருந்தால் கூட, இவ்வளவு காலம் அவர்கள் சிறையிலிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
தற்போது நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் சுமார் 270 க்கும் அதிகமானவர்கள் அரசியல்க் கைதிகள் என்ற போர்வையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை மனிதாபிமானமற்ற நடவடிக்கையென எமக்குத் தோன்றுகின்றது.
எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதி உடனடியாகத் தலையிட்டு தமிழ் அரசியல்க் கைதிகளின் மனிதாபிமானக் கோரிக்கையை கவனத்திற்கொண்டு, அவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென ந.தே.மு. வேண்டுகோள் விடுக்கின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025