2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி அரிசி ஆலையில் நெல் அவிக்கும் இயந்திரம் வெடிப்பு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 26 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி முதலாம் குறிச்சியில் பிரதான வீதியை அண்டி அமைந்துள்ள அரிசி ஆலையில் இன்று (26) அதிகாலை நெல் அவிக்கும் இயந்திரம் திடீரென்று வெடித்ததில் ஆலையின் கட்டடம் மற்றும் தளபாடங்கள் சேதமடைந்துள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த அரிசி ஆலைக்கு அருகிலிருந்த 3 வீடுகள் மற்றும் களஞ்சியசாலைக்கும்; சேதம் ஏற்பட்டுள்ளன. அவ்வீடுகளின் கூரை ஓடுகளும் தரைகளும் உடைந்து சேதமடைந்துள்ளன எனவும் பொலிஸார் கூறினர்.    
இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் குறித்த ஆலையின் உரிமையாளர் மற்றும் வீட்டு உரிமையாளர்கள்  முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான விசாரணையைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X