Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியைச் சேர்ந்த 1,500 க்கும் அதிகமானோர் வருடம் தோறும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்ததானம் செய்வதாக காத்தான்குடி சமூக நலனுக்கான அமைப்பின் தலைவரும் வைத்தியருமான ஏ.எல்.சியாம் தெரிவித்தார்.
'காத்தான்குடி இரத்ததானம் செய்வோர் சமூகம்' எனும் அமைப்பை ஆரம்பிக்கும் நிகழ்வு, காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'காத்தான்குடியில் இரத்ததான முகாம்களை சமூகசேவை அமைப்புகளே ஒழுங்கு செய்கின்றன. காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய ஊர்களிலுள்ள சுமார் 10 க்கும் மேற்பட்ட அமைப்புகள் நீண்டகாலமாக பல சிரமங்களுக்கு மத்தியில் இரத்ததானம் செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றன. எனவே, இந்த அமைப்புகளை உள்ளடக்கிய கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டு பல விடயங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டுமென்பது உணரப்பட்ட விடயமாகும்' என்றார்
இதன்போது பின்வரும் விடயங்கள் தீர்மானிக்கப்பட்டன.
காத்தான்குடி தள வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ள இரத்த வங்கிக்கு ஆதரவு வழங்குதல், இரத்ததானம் செய்வோரின் சுகாதார நலன் தொடர்பில் இலவச ஆலோசனை வழங்குதல், தேசிய இரத்த வங்கி மற்றும் மட்டக்களப்பு இரத்த வங்கியுடன் தொடர்பைப் பேணுதல், இரத்ததானம் செய்வோர், இரத்தம் தேவையானோரின் தொடர்பை இலகுவாக்க மற்றும் தேசிய, சர்வதேச தொடர்பை ஏற்படுத்துவதற்காக இணையத்தளமொன்றை உருவாக்குதல், இரத்ததானம் தொடர்பான விழப்புணர்வை உள்ளூர், வெளியூர்களில் அதிகரிக்க முயற்சித்தல், இரத்ததான முகாம்களின் கால அட்டவணையைத் தயாரித்தல் உள்ளிட்டவையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago