2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'காதி நீதிமன்றங்களில் பெண்கள் ஜுரிகளாக நியமிக்கப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
காதி நீதிமன்றங்களில் பெண்கள் ஜுரிகளாக நியமிக்கப்பட வேண்டும் என கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர், சட்டத்தரணி எம்.ஏ.எம்.ஹக்கீம் தெரிவித்தார்.
 
முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான மும்மொழிவுக்கான கருத்தரங்கு, காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களினுடைய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடியிலுள்ள அதன் அலுவலகத்தில் சனிக்கிழமை (24) மாலை நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'பெண்கள் தங்களின் பிரச்சினைகளை தற்போது நடைமுறையிலுள்ள காதி நீதிமன்றங்களில் ஆண் காதி நீதிபதிகளிடம் தெரிவிப்பதில் சிக்கலை எதிர்நோக்குவதாகக் குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாகப்; பெண் காதி நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று பெண் நலன் சார்ந்த அமைப்புகள்; வலியுறுத்துகின்றன.

எனினும், இது தொடர்பில் இஸ்லாமிய ரீதியில் ஆராய வேண்டிய அவசியம் உள்ளது. பெண் காதி நீதிபதிகளை நியமிப்பது சரியா அல்லது பிழையா என்பது தொடர்பில் இஸ்லாமிய ரீதியில் ஆராய வேண்டும். ஆகவே, காதி நீதிமன்றங்களில் பெண்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்கும் அவர்களுக்குக் கரிசனை காட்டுவதற்கும்  காதி நீதிமன்றங்களில் பெண் ஜுரிகளை நியமிக்க வேண்டும்' என்றார்.

'கணவன், மனைவிக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்துவைத்து, அவர்களை ஒன்றுசேர்க்கும் இணக்க சபையாக காதி நீதிமன்றங்கள் செயற்படுகின்றது' எனவும் அவர் கூறினார்.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X