Suganthini Ratnam / 2016 நவம்பர் 11 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்
வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட கூழாவடி நெல்லிக்காடு பகுதியில் அமைந்துள்ள கிருமிநாசினிக் கடையொன்று இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் புதன்கிழமை (10) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ தினமான அன்று கடையின் முன்புறக்கதவு உடைக்கப்பட்டு சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான கிருமிநாசினி மற்றும் களைநாசினி, உரவகைகள் என்பன திருடப்பட்டுள்ளன.
கடை உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் சம்பவம் பற்றி முறைப்பாடு செய்ததற்கமைய பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago