2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'கௌரவமாக வாழ முடியுமா என்பதே தற்போது முஸ்லிம்களுக்கு பிரதான பிரச்சினையாக உள்ளது'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 22 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் கௌரவமாக வாழ முடியுமா என்பதே இப்பொழுது முஸ்லிம்களுக்கு உள்ள பிரதான பிரச்சினையாக இருக்கின்றது  என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேசம் மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம வீதிகளைப்; புனரமைக்கும்; வேலை சனிக்கிழமை (21) மாலை ஆரம்பிக்கப்பட்டது.

சுமார் 60 மில்லியன் ரூபாய் செலவில்; முதற்கட்டமாக 16 உள் வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'காணி, நீர் விநியோகம், மீள்குடியேற்றம், வாழ்வாதாரம், விவசாயம், மீன்பிடி, நிர்வாக அதிகாரிகளின் இனத்துவேஷ புறக்கணிப்பு உள்ளிட்ட பல  பிரச்சினைகளுக்கு இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தற்போது முகங்கொடுத்து வருகின்றார்கள்.

ஆயினும், அவற்றையெல்லாம் விட இந்த நாட்டில் கௌரவமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் இனிமேலும் கௌரவமாக வாழ முடியுமா என்ற அச்சத்துடன் இப்பொழுது காலம் கடத்துகின்றார்கள்' என்றார்.

'முஸ்லிம் அரசியல்வாதிகள், என்னாலேயே இந்த அபிவிருத்தி செய்யப்பட்டது என்று தங்களுக்குள் பெருமையடித்துக் கொள்வதைத் தவிர்த்து,  சமூகம் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளையிட்டு ஒற்றுமைப்பட வேண்டும்.
முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள், உலக நாடுகளின் கவனத்துக்குக்; கொண்டுசென்று தீர்வு காண வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் இருக்கும்போது, தங்களுக்குள் பெருமையடித்துக் கொள்ளும் அரசியல்வாதிகளாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் இருக்கக்கூடாது.

இந்த நாட்டுக்காக அன்று தொடக்கம் இன்றுவரை சிறுபான்மையினர் தங்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X