2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'கோறளைப்பற்று தெற்குப் பிரதேச செயலகத்துடன் இணைந்ததாக பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்குப் பிரதேச செயலகத்துடன் இணைந்ததாக பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன், ஓட்டமாவடிப் பிரதேச சபையுடன் இணைந்துள்ள 5 தமிழ்க் கிராமங்களும் இந்தப் புதிய பிரதேச சபையுடன் இணைக்கப்பட வேண்டும்.

இதேவேளை, கோறளைப்பற்றுப் பிரதேச சபையுடன் இணைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கிராம அலுவலகர் பிரிவுகள் கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று தெற்குப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கோவில்கள், பொது அமைப்புகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்;பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு, புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய பாலங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை. எதிர்காலத்தில் இதற்கான முயற்சியை நாம் மேற்கொள்வோம்.

கிரான் பாலம் அமைத்து வீதியைப் புனரமைப்பதற்காக 2011ஆம் ஆண்டு  காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு,  ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையால் திட்ட அறிக்கை தயரிக்கப்பட்டது. இருப்பினும், போதிய நிதி அரசாங்கத்தால் வழங்க முடியாது போனமையால் இன்றுவரை அது  முற்றுப்பெறவில்லை' என்றார்.
 
'தற்போது இம்மாவட்டத்தில் 4 பாலங்களை  அமைப்பதற்கு திட்டமிடப்படுள்ளது. கிண்ணையடி -முருக்கன்தீவுப் பாலம்  அமைப்பதற்கு 850 மில்லியன் ரூபாயும் சந்திவெளி -திகிலிவட்டைப் பாலம் அமைப்பதற்கு 1,200 மில்லியன் ரூபாயும்  பன்குடாவெளி -நரிப்புல்தோட்டம் பாலம் அமைப்பதற்கு 650 மில்லியன் ரூபாயும்  இராணமடுப் பகுதியில் பாலம்; அமைப்பதற்கு 120 மில்லியன் ரூபாயும் தேவைப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பாலம் அமைக்கும் பிரிவினர் மதிப்பீடு செய்ததுடன்,  அந்த அறிக்கைகளும் எங்களுக்கு கிடைத்துள்ளன.

அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை. வெளிநாடுகளில் கடன் பெறும் நிலைமையே தற்N;பாது காணப்படுகிறது. மாவட்டத்தில் பல பாலங்கள் வெளிநாட்டு நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X