Princiya Dixci / 2016 மே 01 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
வெப்பமான இந்தக் காலத்தில் பருத்தி நூலினால் தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்து கொள்வது உடல் நலனுக்கு சிறந்தது என காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்தார்.
புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் கைப்பணிக் கண்காட்சியினை இன்று ஞாயிற்றுக்கிழமை (01) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாலர் பாடசாலை பணியகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய டாக்டர் ஜாபீர், அதிக வெப்பம் காரணமாக பலருக்கு தோல் நோய் ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு மக்கள் செல்கின்றனர்.
அதிக வெப்பம் காரணமாக மனிதனில் காணப்படும் வியர்வை நீர்த் தன்மை மற்றும் உப்பு தன்மை உடம்பிலிருந்து வெளியாகுவதால் உடம்பில் பல தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன.
இந்த வெப்பமான காலத்தில் பருத்தி நூலினால் தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
சிறுவர்களை வெயில் விளையாடுவதற்கு அனுமதிக்க கூடாது. அவ்வாறு அவர்கள் வெயிலில் விளையாடினால் அவர்களுக்கு மயக்கம் போன்ற நோய்களும் ஏற்படும்.
அதனால் முன்பள்ளி ஆசிரியர்கள் முன்பள்ளி மாணவர்களை வெப்பமான இந்தக் காலத்தில் வெளியில் விளையாடுவதை அனுமதிக்கக் கூடாது. அதே போன்று பெற்றாரும் வெயிலில் விளையாடுவதற்குச் சிறு பிள்ளைகளை அனுமதிக்க கூடாது.
சிறுவர்களுக்கு பழச்சாறுகளை பருகுவதற்கு வழங்க வேண்டும். அதில் நிறை சத்துக்கள் காணப்படுகின்றன.
அதிகம் வெப்பம் காணரமாக பலரும் நோய்த்தாக்களுக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படும். இந்தக் காலத்தைப்பற்றிய விழிப்புணர்வு நமக்கு அவசியமாகும் என்றார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago