Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே. எல்.ரி.யுதாஜித்
அன்றைய ஆட்சியாளர்களினால் செய்யப்பட்ட குளறுபடிகளை உடனடியாக நிறுத்திவிட முடியாது. அரச நிர்வாகம் என்பது நாம் சொல்வதை செய்வதாக இல்லை. ஏனெனில், இன்னும் இதில் மஹிந்தவின் அணியினர் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - கிரான் கமநல கேந்திர நிலையத்தில் திங்கட்கிழமை(28) மாலை இடம்பெற்ற கிரான் பிரதேச மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றி அமைச்சர் துரைராஜசிங்கம்,
இவ்வருடம் தை மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் விளைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கிழக்கு மாகாணத்தில் இரு அமைச்சுப் பொறுப்புகளைப் பெற்றோம். இந்த 09 மாத காலங்களுக்குள் நான் விவசாய அமைச்சர் என்கின்ற ரீதியில் எம்முடைய விவசாயகளின் நலன் தொடர்பாக அடித்தளத்தை நாம் இட்டிருக்கின்றோம்.
இந்தப் பிரதேசத்தில் இடம்பெறும் பாரிய பிரச்சினையாக இருப்பது மேய்ச்சற்தரைப் பிரச்சினையாகும். இது தொடர்பில் அந்த கால்நடை வளர்ப்பாளர்களுடன் மிகவும் அந்நியோன்யமாக இருந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேம்.
மேய்ச்சற் தரைப்பிரச்சினை தொடர்பில் அப்பிரதேசம் யாருடைய நிர்வாகத்தின் கீழ் வருகின்றது என்று அதிகாரிகளே முரண்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். காடுகள் எல்லாம் வன இலாகாவின் பொறுப்பில் உள்ளவை ஆனால் அவர்களின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை.
இவ்விடயம் தொடர்பில் எதிர்ப்பக்கத்தில் இருந்து இன்னும் மறைமுகமானதொரு கை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியைச் சந்தித்த இரு தடவைகளும் அவரிடத்தில் நான் கூறியிருக்கின்றேன்.
இப்போது புதிதாக இந்த பிரதேசம் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வருகின்றது என்று சொல்கின்றார்கள். கரடியனாறு பொலிஸாரும் இது தங்கள் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசம் இல்லை என்கின்றார்கள். இலங்கையில் அவ்வாறு பொலிஸ் அதிகாரத்திற்குட்படாத இடங்கள் என்று இருக்கின்றனவா என்கின்ற கேள்வி எழுகின்றது. இவ்விடயம் தொடர்பில் பொலிஸாரும் முரண்படான நிலையிலேயே இருக்கின்றார்கள்.
மகாவலி அபிவிருத்தித் திட்டம் தன்னுடைய காணிகள் என்று சொல்வதற்குப் பல சட்ட நடைமுறைகள் இருக்கின்றன அதனை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை.
இவையெல்லாம் அன்றைய ஆட்சியாளர்களினால் செய்யப்பட்ட குளறுபடிகள். இவற்றை நாட் உடனடியாக நிறுத்திவிட முடியாது. அரச நிர்வாகம் என்பது நாம் சொல்வதை செய்வாக இல்லை ஏனெனில் இன்னும் இதில் மஹிந்தவின் அணியினர் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இவர்களெல்லாம் இந்த சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுப் பழகாதவர்கள். இதனால் இதில் ஒரு மாற்றம் கொண்டுவருவது உடனே இடம்பெறும் காரியம் அல்ல என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago