2025 மே 07, புதன்கிழமை

'கிழக்கு மாகாண அதிகாரம் தொடர்பில் கேள்வியெழுப்ப அனுமதியேன்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 16 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

கிழக்கு மாகாணத்தின் அதிகாரம் தொடர்பில் எவரும்;   கேள்வி எழுப்புவதற்கு முதலமைச்சர் என்ற ரீதியில் தான் அனுமதிக்கப் போவதில்லையென அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கான மருந்துக் களஞ்சியசாலை மற்றும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கான புதிய நிர்வாகக் கட்டடம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, அங்கு ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மாகாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்லா அரசாங்க கட்டடங்களையும் திறப்பதற்கு தனக்கே அதிகாரம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு, பின்னர் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது இராஜாங்க அமைச்சராகவோ வந்தவர்கள் கிழக்கு மாகாண நிர்வாகத்தில் தலையிடுவது கவலைக்குரியது' என்றார்.

'அரசாங்கத்தில் அதிகாரத்திலிருந்து தனது முயற்சியால் அல்லது தான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அரசாங்க கட்டடமொன்றுக்கு அடிக்கல் நாட்டிவிட்டால், அது தனக்குச் சொந்தமான கட்டடமென்றும் அதற்கு தனது பெயரையே வைக்க வேண்டுமென்றும் கூறும் அரசியல்வாதிகள் உள்ளனர். அவ்வாறு அரசாங்கச்  சொத்துகளுக்கு தனது பெயரை வைக்க வேண்டுமென்று நினைக்கும் அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும்' எனவும் அவர்  தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டில்  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள மருந்து களஞ்சியசாலைக்கு இருபது மில்லியன் ரூபாவும்  கோறளைப்பற்று மத்தி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் அமைப்பதற்கு முதற்கட்டமாக எழுபத்தைந்து லட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X