Suganthini Ratnam / 2016 நவம்பர் 23 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
தற்போது கிழக்கு மாகாணச் சிவில் சமூகம் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்துக்கான அரங்கத்தின் கிழக்கு மாகாணத் தலைவர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ், இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது,'அதிகார அழுத்தங்கள் இருப்பதாக மக்கள் அச்சப்படும் சூழ்நிலையில், சட்டத்தில் என்ன வகையான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பது பற்றி எதுவும் தெரியாதவர்களாக மக்கள் உள்ளனர்.
சிவில் நிர்வாகத்தை அமுல்படுத்தக்கூடிய பொறுப்புள்ள அலுவலர்களான பொலிஸாரின் நடவடிக்கைகள் நடுநிலையானதாக இல்லை. அது பாராபட்சமும் பக்கச்சார்பானதாகவும் காணப்படுகின்றது. இதனையிட்டு மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளார்கள். இதனால் கிழக்கு மாகாணத்தில் பரவலாக அச்சம் ஏற்பட்டுள்ளதுடன், புதிய முரண்பாடுகளும் தோன்றுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது' என்றார்.
'மேலும், பொலிஸ் விசாரணையின்போதும் கூட, அதிகார அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள். பொலிஸ் உயர் அதிகாரிகளைச்; சந்திக்கக்கூடிய செலவாக்குடையவர்களுக்கு மாத்திரம் பொலிஸாரின் சிநேகமான நட்புறவு கிடைப்பதாகவும் சிவில் சமூகம் கருதுகிறது.
மாற்றுக் கருத்துகளை மௌனிக்கச் செய்ய வேண்டும் என்பதில் அதிகாரிகள் அக்கறையாக இருப்பதாகவும் இது மீண்டும் யுத்த காலத்தைப் போன்று அச்சுறுத்தலான செயற்பாடுகளுக்கு வழிவகுக்கின்றதா என்றும் ஐயப்படக்கூடியதாக உள்ளது.
ஒட்டுமொத்தத்தில் சமகால நாட்டு நடப்புகளையிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் சிவில் அமைப்புகள் குழம்பியுள்ளன. ஆனாலும், எத்தகைய சூழ்நிலையிலும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டாது என்பதில் சிவில் அமைப்புகள் திடசங்கற்பம் பூண்டுள்ளன.
அரசாங்க அல்லது ஆளுந்தரப்பின் ஏகாதிபத்திய அரசியல் நலன்சார்ந்த அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என்பதிலும் சிவில் சமூகம் கரிசனை கொண்டுள்ளது' எனவும் அவர் கூறினார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago