Suganthini Ratnam / 2016 மே 10 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்தில் புதிய அதிபர்களாக 350 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக அம்மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
மேற்படி புதிய அதிபர்களுக்கான செயலமர்வு, மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் திங்கட்கிழமை (09) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிலையில், இவர்களுக்கு எட்டு நிலையங்களில் ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
ஏனைய சேவைகளை விட அதிபர் சேவை மிக முக்கியமான சேவையாகும். அதிபர் சேவையும் அனுபவம் மிக்கதாகும் எனவும் அவர் கூறினார்.
இதன் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், திட்டப் பணிப்பாளர் எம்.உனைஸ் உட்பட வலயக் கல்விப் பணிப்பாளர்கள், வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago