Suganthini Ratnam / 2016 நவம்பர் 10 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
தற்போது கிழக்கு மாகாணத்தில் 54 மருந்தாளர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக மாகாணச் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
மத்திய அரசாங்கத்தால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 480 மருந்தாளர்களில் தற்போது இம்மாகாணத்துக்கு 19 மருந்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இம்மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடந்த 10, 15 வருடங்களாகக் கடமையாற்றி வருகின்ற வெளிமாகாணங்களைச் சேர்ந்த 17 மருந்தாளர்கள் தங்களின் சொந்த மாகாணங்களுக்குச் செல்வதற்கான இடமாற்றத்தைக் கோரியுள்ளனர். ஆகவே, இவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மருந்தாளர்களுக்கு நியமனக்கடிதங்களை வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டிருந்ததால், இவர்களுக்கு புதன்கிழமை (09) நியமனக்கடிதங்களை வழங்க முடியாமல்; போனதாகவும் நாளை வெள்ளிக்கிழமை இவர்களுக்குரிய நியமனக்கடிதங்கள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
11 minute ago
22 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
3 hours ago
3 hours ago