2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு 13ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 11 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (13) விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணியிடம்; கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், இன்று (11) கோரிக்கை விடுத்துள்ளார்.

தைப்பொங்கல் விழா எதிர்வரும் சனிக்கிழமை என்பதுடன், நாளை வியாழக்கிழமை போயா விடுமுறையாகும்.
மேலும், வடக்கு மாகாணசபை நாளை மறுதினம்  வெள்ளிக்கிழமையை  விடுமுறையாக அறிவித்துள்ளது.

எனவே, கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் தைப்பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்து, அத்தின விடுமுறைக்குப் பதிலாக சனிக்கிழமையில் பாடசாலையை நடத்துவதற்கான ஏற்பாடு செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X