2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் சம்மேளனம்' உருவாக்கம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 08 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 'கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் சம்மேளனம்' திங்கட்கிழமை (07) மாலை உருவாக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போதே, இப்புதிய சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கல்வி, காணி, அரசியல், பொருளாதாரம் ஆகியவை தொடர்பில் கவனம் செலுத்தும் வகையிலேயே இந்தச் சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளதாக இதன் இணைப்பாளர் ஏ.எல்.எம்.சபீல் நழீமி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இதன் செயற்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும்; ஆராயப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இப்புதிய சம்மேளனத் தலைவராக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மௌலவி இசட்.எம்.நதீரும் செயலாளராக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எச்.ஏ.எம்.இஸ்மாயிலும் பொருளாளராக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஏ.சி.எம்.லாபீரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

உப தலைவர்களாக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மௌலவி எம்.சி.ஏ.ஹிதாயத்துல்லாஹும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.லத்தீப்பும் தெரிவுசெய்யப்பட்டனர். உப செயலாளர்களாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.எம்.பஹீஜும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.நியாஸும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதன் ஒருங்கிணைப்பாளராக காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நழீமியும் நிர்வாக உறுப்பினர்களாக மூன்று மாவட்டங்களிலிருந்தும் மூன்று பேர் படி  ஒன்பது பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X