Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
இந்திய அரசானது வடக்கில் ஒரு துணைத்தூதரகம் அமைத்து பாதிக்கப்பட்டவர்கள் துயர் துடைப்பது போல எதிர்காலத்தில் கிழக்கிலும் ஒரு துணைத்தூதரகத்தை அமைத்து கிழக்கு மக்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று புதன்கிழமை இந்திய உயர்ஸ்தானிகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
அண்மையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் ஒன்றில் உரையாற்றிய இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நட்ராஜன், வடக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது தமது கடமை என்ற வகையில் தெரிவித்துள்ள கருத்தை ஊடகங்கள் ஊடாக கண்ணுற்றபோது பல அதிர்வலைகளை என்னுள் ஏற்படுத்தியது.
வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் அரசியல் விடுதலை உணர்வு எம் இளைஞர்களிடையே கூர்மையடைந்து அது ஆயுதப் போராட்டமாக பரிணமித்தவேளை அதற்கு ஒரு பின்தளமாக இருந்து எம்மை ஊக்குவித்தது இந்தியாவே ஆகும்.
அந்தவகையில் இன்னும் கூட இந்தியாவுக்கு எமது இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஒரு காத்திரமான பங்கினை வகிக்கும் தார்மீக பொறுப்பு உண்டு. இதனை இந்தியா மறுக்க முடியாது என்பதே எமது மக்களின் அபிப்பிராயம்.
இதனால்தான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட,கிழக்கு தாயகத்தின் புனர்நிர்மாணப் பணிகளில் முக்கிய பங்கை வகிக்க இந்தியா முன்னிற்க வேண்டுமென்று எம்மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
மேலும்,இந்திய அரசு இலங்கை தமிழர் தாயகம் தொடர்பான தனது கரிசனையினை வடக்குக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது கிழக்குக்கும் விஸ்தரிக்கவேண்டும். இது இந்தியாவினது தார்மீகப் பொறுப்பாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago