Niroshini / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வளர்த்து பலப்படுத்தவுள்ளோம் என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
காத்தான்குடியிலுள்ள இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அலுவலகத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை(11) மாலை விஜயம் செய்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே மேற்ண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கிழக்கு மாகாணத்தில் வளர்க்க வேண்டியுள்ளது. அந்த பொறுப்பு இன்று இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஒரு துடிப்புமிக்க அரசியல்வாதியும் சிறந்த சேவையாளரும் என்பதை நான் நன்கு அறிவேன்.
நாடாளுமன்றத்துக்குள் ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக அவரை நான் பார்த்து வருகின்றேன்.
அவரையும் இந்த பிராந்திய முஸ்லிம்களையும் மதித்தே அவருக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் இராஜாங்க அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் அவர் ஊடாக பல சேவைகளை இந்தப் பிராந்தியத்துக்கு செய்யவுள்ளோம் என்றார்.
8 minute ago
26 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
26 minute ago
44 minute ago
2 hours ago