Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 04 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
தமிழ் மக்களுக்கு தீர்வுத்திட்டம் வரும்போது அதனை குழப்பக்கூடிய செயற்பாடுகள் நடைபெறுவது உள்ளன. அந்த குழப்ப நிலையினை தமிழ் அரசியல் தலைமைகளே செய்து வந்ததாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் சனிக்கிழமை(02) மாலை மட்டக்களப்பு கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியான அமைப்புகள் உருவாவது தவிர்க்கமுடியாத விடயம். அந்த வகையில் வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வுத்திட்டம் வழங்குவதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அதனை இராஜதந்திர ரீதியில் நகர்த்த வேண்டிய தேவையுள்ளது.இந்தவேளையில், இந்த நகர்வுகளை குழப்பும் விதமாக அமையக்கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
சம்பந்தன் ஐயா முதிர்ச்சிபெற்ற அரசியல்வாதி.பல தலைவர்களுடன் அரசியல் பணியை ஆற்றியுள்ளார்.அனைத்து அரசியல் தலைவர்களினதும் வளைவு, நெளிவினை அறிந்தவர்.அவர்களிடம் இருந்து தீர்வுத்திட்டத்தினைப்பெற்றுக்கொள்வதில் அவர் தேர்ச்சிபெற்றவராக உள்ளார்.
இவ்வாறான நிலையில் குழறுபடியான நிலைமையினை எந்தவொரு அமைப்பும் எந்தவொரு சபையும் தோற்றுவிக்கக்கூடாது. தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு செல்லும்போது அதனை புறந்தள்ளுமாறு மக்களை தூண்டும்போது எமக்கு ஒன்றும் கிடைக்காத நிலையே உருவாகும்.
பிராந்திய சபைகளை சந்திரிக்கா அம்மையார் கொண்டுவந்தார். அதில் நல்ல அம்சங்களும் இருந்தன. வடக்கு, கிழக்கு இணைப்பு,ஆளுனரின் அதிகாரத்தினை குறைப்பது,ஆளுனரை நியமிக்கும் சிபாரிசினை முதலமைச்சர் வழங்குவது உட்பட தமிழர்களை பெரும்பான்மையாக கொண்டு அந்த திட்டம் தயாரிக்கப்பட்டபோது, அதனை நாங்கள் குழப்பினோம்.இன்றைய நிலையில் அந்த பிராந்திய சபை கூட கிடைப்பது கஸ்டமான நிலையிலேயே உள்ளது.
அவ்வாறான ஒரு தீர்வுத்திட்டம் தொடர்பில் நாங்கள் சிந்திக்கும்போது புதிதாக உருவாகுபவர்கள் புதிய திட்டங்களைத் தயாரித்து அதன்படி செயற்படும்போது மேலும் மேலும் எமது இனப்பிரச்சினை இழுபறி நிலையிலேயே செல்லும் என்றார்.
மேலும், மட்டக்களப்பிலும் இருந்து சிலர் தமிழ் மக்கள் பேரவைக்கு சென்றுள்ளனர். தங்களிடம் கேட்காமல் சென்றதாக எமது ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையும் கூறியுள்ளார். இவ்வாறான குழறுபடிகள் இருக்கும்போது நாங்களும் தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும். நல்லதை செய்தால் அவர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்.
கருணா,டக்ளஸ்,ஆனந்த சங்கரி போன்றவர்களும் இந்த தமிழ் மக்கள் பேரவையில் இணையப்போகின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறான நிலையில் அது தொடர்பில் கூடுதலாக சிந்திக்வேண்டிய தேவையிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago