2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கஞ்சாவுடன் நால்வர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 21 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேரை மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைதுசெய்துள்ளதுடன், இவர்களிடமிருந்து சா 212 மில்லிக்கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.

காத்தான்குடி முதியோர் இல்ல வீதியை அண்டி அமைந்துள்ள வீடு ஒன்றில் பொதி செய்து விற்பனைக்காக வைத்திருந்த கேரள கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர்கள் மூவரையும் கைதுசெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை,  கர்பலா வீதியில் உள்நாட்டு கஞ்சாவை விற்பனை செய்த ஒருவரையும் கைதுசெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X