2025 மே 10, சனிக்கிழமை

கஞ்சாவுடன் மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 17 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி மற்றும் சத்தாம் ஹுஸைன் கிராமங்களில்  கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 18 வயதுடைய மூன்று பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளதுடன், இவர்களிடமிருந்து கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.   

சந்திவெளியில் ஒருவரிடமிருந்து 4,700 மில்லிகிராம் கஞ்சாவும் மற்றையவரிடமிருந்து 3,690 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டன.

இதேவேளை, ஏறாவூர் சத்தாம் ஹுஸைன் கிராமத்தில் ஒருவரிடமிருந்து 3,140 மில்லிகிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார்  கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X