2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கடன் அடிப்படையில் 356 வீடுகளுக்கு மின்னிணைப்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில்; மின்சார வசதி அற்றிருந்த 356 வீடுகளுக்கு கடன் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலைய மின் அத்தியட்சகர் சி.சுவேந்திரன் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் சிபாரிசின்  அடிப்படையில் ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்கு 623 குடியிருப்பாளர்களின் விண்ணப்பங்கள் மின் இணைப்புக் கோரி சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து 356 வீடுகளுக்கான மின் இணைப்பு கடந்த 06 மாதங்களுக்குள் வழங்கப்பட்டுள்ளது.  
இதேவேளை, விண்ணப்பதாரிகள் வீடுகளில் இல்லாமை, மிகையான மதிப்பீடு உள்ளிட்ட 267 குடும்பங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பயனாளி ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் தொடக்கம் 40 ஆயிரம் ரூபாய் வரையான கடன் அடிப்படையில் மின் இணைப்பு வேலையை இலங்கை மின்சார சபை செய்து கொடுக்கின்றது.

இந்நிலையில், வீட்டு மின்சுற்றுக்கான வயர்கள் பொருத்தப்பட்டிருந்தால் 20 ஆயிரம் ரூபாயும்  வயர்கள் பொருத்தப்படாமலிருந்தால் அதற்காக 40 ஆயிரம் ரூபாய் என்ற கடன் அடிப்படையில் மின் இணைப்பு வேலை  செய்து கொடுக்கப்படுகின்றது.

மின் இணைப்புக்கான கடன் தொகையை 60 மாத கால தவணை அடிப்படையில் இலங்கை மின்சார சபைக்கு இக்குடும்பங்கள் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X