Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
'காணாமல் ஆக்கப்பட்ட எனது கணவரைத் தேடி நான் செல்லாத இடம் கிடையாது. பல இடங்களுக்கும் சென்று எனது கணவரைத் தேடினேன்' என பண்டாரியவெளி கிராமத்தைச் சேர்ந்த பி.சிவநாயகி தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோரை தேடித்தருமாறு கோரி மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 'கதிரவளை பரமானந்தம் என்ற பெயரையுடைய எனது கணவர் காணாமல் ஆக்கப்படும்போது, அவருக்;கு 54 வயதாகும். 19.3.2007இல் அவர் காணாமல் ஆக்கப்பட்டார். அன்றையதினம் தொழிலுக்காக வீட்டிலிருந்து சென்றவர், இதுவரையில் வீடு வந்துசேரவில்லை. நானும் எனது 4 பிள்;ளைகளும் க|டப்படுகிறோம்.
எனது குடும்பத்துக்கு எந்த உதவியும் கிடையாது. நான் கஷ்டப்பட்டு கூலித்தொழில் செய்து எனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி படிப்பித்து வருகின்றேன்' என்றார்.
'எனது கணவர் எங்களின் வீட்டுக்கு எப்போது வருவார் என்று ஏங்கித்தவிக்கிறேன். மேலும், என்னைப் போன்ற பல பெண்கள் கணவன்மார்களையும் சகோதரர்களையும் இழந்து தவிக்கின்றனர். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago