Niroshini / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
தமிழ் சமூகம் இழந்த உரிமைகளை மீண்டும் பெறுவதற்கு கல்வி எனும் ஆயுதத்தைக் கையில் ஏந்த வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வாழைச்சேனை சன் அக்டமி நடத்திய ஓளிவிழா மற்றும் சாதனையாளர் கௌரவிப்பு விழா செவ்வாய்கிழமை(22) மாலை நடைபெற்றது. இதில்; கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடரந்து உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் கல்வியில் முன்னிலை வகித்த தமிழ் சமூகம் யுத்த சூழல் காரணமாக பெறுபேறுகளின் அடிப்படையில் கல்வியில் சற்று வீழ்ச்சியை கண்டுள்ளது.தற்போதைய காலகட்டத்தில் காணப்படும் சுமுகமான சூழலை சரியான முறையில் பயன்படுத்தி நாம் கல்வியில் மீண்டும் முன்னிலை பெற வேண்டும்.
எமது ஆசிரியர் வளங்களை ஏனைய சமூகம் பயன்படுத்தி முன்னேற்றமடையும் நிலை தொடர்ந்த வண்ணம் காணப்படுகிறது. எமது வளங்களை எமது பிரதேசங்களில் பயன்படுத்த வேண்டும் என்றார்.
மேலும்,மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகுவதால் கற்றல் செயற்பாடுகளில் ஆர்வம் குறைவடைகிறது. மாணவர்கள் தீயவழியில் செல்வதற்கு நான் ஒரு போதும் இடமளிக்கமாட்டேன்.
தற்போது சமுதாயத்தில் படித்தவர்களில் தொகை அதிகரித்துள்ள காரணத்தினால் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு சாதாரண சிற்றூழியர் நியமனம் வழங்கக் கூடிய நிலமை உருவாகலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025