2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கழிவுப்பொருட்களில் அலங்காரப் பொருட்கள்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சூழலில் கொட்டப்படுகின்ற பல்வேறு கழிப்பொருட்களை  மீள்சுழற்சி முறையில் பயன்படுத்துவதன் மூலம் அலங்காரப் பொருட்கள் மற்றும் உபயோகப் பொருட்கள் பலவற்றை  உருவாக்கிக்கொண்டு சூழலைப் பாதுகாக்க முடியுமென பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் விருத்திச் செயலமர்வு, பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (23) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எம்மைச் சுற்றி முற்றிலும் எல்லாம் செயற்கையை கொண்டு உருவாக்கப்பட்ட பொருட்களாகவே காணப்படுகின்றன. இயற்கையில் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தும்போது அவற்றினால் ஏற்படும் நன்மைக்கு அளவே இல்லை. அதேபோல இயற்கையை கொண்டு செய்யப்படும் பொருட்களை பார்வையிடுவதற்கும் பல வெளிநாட்டார்கள் எமது பிரதேசத்திற்குள் வருகை தருவதற்கும் சுற்றுலா இடமாக மாறுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன' என்றார்.

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இச்செயலமர்வில் மாற்றுத்திறனாளிகள் 15 பேர் கலந்து கொண்டனர். இங்கு பன்புல், பனையோலைகளைக் கொண்டு பல்வேறு அலங்காரப் பொருட்கள் தயாரித்தல், உணவுப் பொருட்களும் செய்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X