Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 29 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
தனியார் மருந்தகங்களில் பணியாற்றுபவர்கள் 20 முதல் 30 வருட கால சேவைக்கால அனுபவம் இருந்தும் மருந்தாளர் பாடத் தொகுதி பரீட்சையில் சித்தியடையாவிட்டால் குறித்த நிலையங்களில் மருந்துகள் விற்பனை செய்வதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாக ஐ.எம். எஸ். கெல்த் லங்கா லிமிட்டெட்டின் ஆராய்ச்சி உத்தியோகத்தர் எ.இசட். வை. வசந்தராஜன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட தனியார் மருந்தகங்களின் உரிமையாளர்கள் சங்கத்தின் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக சபை தெரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு றோட்டரிக் கழக மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மருந்தகங்களில் கட்டுப்பாட்டு விலைகளில் விற்பனை செய்வதோடு குறித்த நிலையம் குளிரூட்டப்பட்டு மருந்துகள் பாதுகாப்பாக உள்ளதோடு தகுதி வாய்ந்த மருந்தாளரின் சான்றிதழ் மற்றும் விற்பனை அனுமதிப்பத்திரத்தினுடாக மருந்துகள் விற்பனை செய்ய வேண்டும்.
இதற்கு பதிலாக அனுமதிப்பத்திரம் இல்லாமல் அனுபவமிக்கவர்களினால் நடத்தப்படுமிடத்து அதில் தொழில் புரியும் ஊழியர்களுக்குக் கூட தொழில் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என்றார்.
இதன்போது, சபையின் தலைவராக வீனஸ் நேசிங் ஹோம் முகாமைத்துவப் பணிப்பாளர் வி.இராமநாதன், செயலாளராக விசன் பாமா முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.சுதாகரன், பொருளாளராக மை சண் மருந்தக உரிமையாளர் பி.எம்.எம். மன்சூர்,உப தலைவராக எம்.ஏ. நவ்சாத்,உப செயலாளராக ஏ.ஆர்.ஹகிப் ஆகியோரும் எம்.எம்.ஏ. லத்தீப், வி.அபூவக்கர், எம்.சி. ஜிப்ரி ஹசன், வி.தேவதாஸ், வி. ஜனார்த்தனன் ஆகியோர் நிர்வாக சபை உறுப்பினர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
45 minute ago