Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 21 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
தொற்றா நோய்கள் ஏற்படாமல் இருப்பதற்கு சீரான உடற்பயிற்சிப் பழக்கம் அவசியம். அதை ஊக்குவிக்கும் நோக்கோடு மட்டக்களப்பில் கல்வி மற்றும் நிர்வாக விற்பனர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையினால் கைவிடப்பட்ட பொருட்களைக் கொண்டு ரூபாய் 3.5 மில்லியன் செலவில் பாலம் மற்றும் நடைபாதை உள்ளிட்ட பொழுது போக்கும் பூங்கா நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (20) மாலை இடம்பெற்றது.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் குப்பைகள் உள்ளிட்ட கழிவுகளைக் கொட்டும் இடமாக இருந்த இந்த இடத்தை, 2014ஆம் ஆண்டு முதல் மாநகர சபையின் ஆளணிகளைக் கொண்டு, அவர்களின் அயராத முயற்சியினால் குறித்த பொழுது போக்கும் இடமாக மாற்றியுள்ளோம்.
மட்டக்களப்பில் மட்டுமன்றி இலங்கை முழுவதிலும் சிறந்த நிர்வாக சேவை அதிகாரியாகப் பணியாற்றி மறைந்த முன்னாள் அரசாங்க அதிபர் ஏ.கே. பத்மநாதன் மற்றும் கல்வியில் சிறந்த விற்பனர்களை உருவாக்கிய ஆசான் பிரின்ஸ் காசிநாதர் ஆகியோருக்கு கௌரவமளிக்கும் நோக்கோடும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்தும் குறித்த நடைபாதையில் உள்ள பாலத்திற்கு பிரினஸ் காசிநாதரின் பெயரும் அதனுடன் இணைந்துள்ள நடைபாதைக்கு ஏ.கே. பத்மநாதனின் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
இயற்கைக் காற்றோட்டமுள்ள மட்டக்களப்பு வாவியின் அருகே, சிறார்களின் நலன் கருதி நடைபாதையுடன் இணைந்த சிறுவர் பூங்கா ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் உள்ள சொத்துக்களை அதனைப் பாவிப்போர் பொதுச் சொத்து எனக் கருதாது தங்களின் சொத்து எனும் மன நிலையை உருவாக்கி அவற்றைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago