2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சிரமதான நிகழ்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையுள்ள தினங்களை பாடசாலை மட்டத்திலான டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான விபரங்கள் அடங்கிய சுற்று நிருபங்கள் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளமையை தொடர்ந்து மாபெரும் சிரமதான நிகழ்வு இன்று திங்கட்கிழமை  பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் சி.பேரின்பராசா தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பாடசாலை வளாகத்தை சிரமதானம் மூலம் துப்பரவு செய்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X