Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 04 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெரிய கட்சிகள் ஒன்றுபடுகின்றபோது, சிறுபான்மை இனங்களைப்; பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் பிளவுபடுவது ஆபத்தானதென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
முன்னாள் செனட்டர் மசூர் மௌலானாவின் நினைவுகூரல் நிகழ்வு, ஏறாவூர் வாவிக்கரையோரப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு நடைபெற்றது. இதன்போது, 'சமகால அரசியல்' எனும் தலைப்பில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'முக்கியமான அரசியல் யாப்புத் திருத்தத்தினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படுமென்று அனைவரும் எதிர்பார்த்துள்ள தற்போதைய சூழ்நிலையில், சிறுபான்மைச் சமூகக் கட்சிகளுக்குள்ளும் சிறுபான்மை இனங்களுக்குள்ளும் பிளவுகள் ஏற்படுவது மிகவும் ஆபத்தானது' என்றார்.
'தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றபோது, தற்போது புதிதாக 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பு உருவாகியுள்ளது.
பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளின் ஒப்பந்தத்தில் புதிய அரசியல் யாப்புத் திருத்தம் நிறைவேறி விடுமென்ற ஆபத்து இருக்கத்தக்கதாக, ஒட்டுமொத்தமாக தமிழினத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி பிளவுபட்டுப் பிரிந்து நின்று ஏகோபித்த தமிழர் ஆதரவு என்ற அந்த நிலைப்பாட்டிலும் மாற்றம் வருவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மாத்திரமல்ல பேராபத்து நிறைந்ததாகும்;.
சில அரசியல் தலைவர்களுடைய தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டுமென்று புத்திஜீவிகளும் சிவில் சமூகமும் விரும்பினால், அந்தத் தலைவர்களுடன் பேசி உடன்பாட்டைக் கொண்டுவந்து இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஏகோபித்த முடிவுக்கு வரவேண்டுமே தவிர, வெண்ணைய் திரண்டு வருகின்றபோது தாழியை உடைக்கின்ற நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பொதி, தமிழ் மக்கள் பேரவை ஒரு பொதி என்று மேசைக்குக் கொண்டுவந்தால், அது இதுவரை நாம் கண்டிராத ஆபத்தைக் சிறுபான்மை இனங்களுக்குக் கொண்டுவருவதுடன், எதுவுமே கிடைக்காத ஒரு கையறு நிலைக்கும் இட்டுச் செல்லும். அத்துடன், அந்த பிளவுபட்ட நிலைப்பாடு அடுத்த சிறுபான்மை இனமான முஸ்லிம்களையும் பாதிக்கும்.
புதிய அரசியல் யாப்புக்கு முன்பாக முதலில் சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது சமூகங்களுக்குள்ளும் பின்னர் தமிழ் -முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலும் புரிந்துணர்வுடன் பேசி அசைக்கமுடியாத உடன்பாட்டை எட்டிக்கொண்டு அதனை பெரும்பான்மையினத்; தேசியத்திடம் முன்வைக்கவேண்டும். தமிழ், முஸ்லிம் மக்கள் உடன்பட்டுத் தயாரிக்கும் புரிந்துணர்வுப் பொதியே இந்நாட்டில் சிறுபான்மை இனங்களை வாழவைக்கும்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago