2025 மே 09, வெள்ளிக்கிழமை

'சிறுபான்மைச் சமூக ஆசிரியர்கள் 200 பேர் புறக்கணிப்பு'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த சுமார் 200 ஆசிரியர்களின் பதவிக்காலம் கடந்த 07 வருடங்களுக்கும் மேலாக  கவனத்தில் கொள்ளப்படாமையினால் பதவி உயர்வு, சம்பள அதிகரிப்பு, தடை தாண்டல் பரீட்சைகள் ஆகியவற்றில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்தது.

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பி.உதயரூபன் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 'முகாமைத்துவ உதவியாளர், நூலக உதவியாளர், நிதி உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் முன்னர் நியமிக்கப்பட்ட இவர்கள், 2007ஆம் ஆண்டும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும்; இலங்கை ஆசிரியர் சேவை 3-1 தரத்துக்கு உள்வாங்கப்பட்டனர்.

தற்போது ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்ற இவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் பல வருடங்களாகப் பணியாற்றிய காலப்பகுதி கவனத்தில் கொள்ளப்படவில்லை. இதனால்; இவர்கள் பதவி உயர்வு, சம்பள அதிகரிப்பு, பரீட்சைகளுக்குத் தோற்றுதல் உள்ளிட்ட அனுகூலங்களை அடைய முடியாமலுள்ளனர்' என்றார்.  

'இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.அப்துல் அஸீஸ் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் 2013ஆம் ஆண்டு அமைச்சர் வாரியத்தின் அனுமதிக்காக பிரேரணை கொண்டுவரப்பட்டு மாகாணசபை பிரதம செயலாளரால் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டிருந்தும், இவ்விடயம் இதுவரையில் கவனத்தில் கொள்ளப்படாமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X