Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 28 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
எதிர்வரும் அரசியல் நிலைமையில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமைப்படவில்லையென்றால், இரண்டு சமூகங்களும் ஏமாற்றப்பட்டு விடுமென்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
காத்தான்குடியில் புதன்கிழமை (27) இரவு நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எதிர்கால அரசியல் நிலைமை முஸ்லிம்களுக்கு சவால் நிறைந்ததாகக் காணப்படும். பிரச்சினைகள் நிறைந்ததாகக் காணப்படும். தமிழ் மக்கள் ஓரங்கட்டுப்பட்டு, முஸ்லிம்களை ஏமாற்ற வைக்க எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் சிறுபான்மைச் சமூகங்கள் மிகக் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்' என்றார்.
'எதிர்கால அரசியலில் 20ஆவது திருத்தமானது சிறுபான்மையினைரை தோல் உரிக்கின்ற விடயம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களுடைய தோலை உரிக்கின்ற சட்டமாக அந்த 20ஆவது திருத்தம் வரவுள்ளதாக நான் நினைக்கின்றேன். தமிழ், முஸ்லிம் சமூகங்களை மீண்டும் குழப்புகின்ற விடயமாக இது இருக்கலாமென்ற அச்சமும் இல்லாமலில்லை.
சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகள் இந்த நல்லாட்சியில் தீர்க்கப்படும் நிலைமை காணப்படவில்லை.
ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் கீரியும் பாம்புமாக 28 வருடங்கள் இருந்த நிலையில், இன்று ஒரே வரிசையில் இருந்து தீர்மானங்கள் எடுப்பதென்பது சாத்தியப்படக்கூடிய விடயமல்ல. இது சவாலுக்குரிய விடயமாகும். எனினும், இங்கு நல்லிணக்கமும் தீர்;வும் வரவேண்டுமாயின் அனைவரும் தியாகம் செய்ய வேண்டும்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago