2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'சிறிய வைத்தியசாலைகளில் வளங்கள் குறைந்துள்ளன'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறிய வைத்தியசாலைகளில் வளங்கள் குறைந்து காணப்படுவதாக தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறிய வைத்தியசாலைகளின் வளங்களை கிழக்கு மாகாணசபை குறைப்பதாக எமது கவனத்துக்;கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவே, சிறிய வைத்தியசாலைகளுக்கான வளங்களை குறைக்கக்கூடாது' என்றார்.

இதற்குப் பதிலளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், 'இம்மாவட்டத்திலுள்ள எந்தவொரு சிறிய வைத்தியசாலைகளின் தரமோ, வளங்களோ குறைக்கப்படவில்லை.

கிழக்கு மாகாணசபையால் சிறிய வைத்தியசாலைகளின் தரம் அதிகரிக்கப்படுவதுடன், வளங்களும் வழங்கப்படுகின்றன.
கிழக்கு மாகாணசபையில் நிதி இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறிய வைத்தியசாலைகளுக்குத் தேவையான வளங்கள் தொடர்பில் எமது கவனத்துக்கு கொண்டுவந்தால், அதற்குரிய நடவடிக்கை எடுக்க நாம் ஆயத்தமாகவுள்ளோம். இது தொடர்பான தகவல்கள் இருப்பின், எமது கவனத்துக்கு கொண்டுவந்து,  விவரங்களைத் தெரியப்படுத்தவும்' என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு 10,660 திட்டங்களுக்காக 913,697 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவைர 2,304 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X