Suganthini Ratnam / 2016 மே 13 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து அதன் ஊடாக இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பு பிரச்சினையை தீர்த்துவைக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவிகளை வழங்கவுள்ளதாக மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் அருட்தந்தை டி.சுவாமிநாதன் அடிகளார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினை மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் அலுவலகத்தில இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரையீ ஹட்செஸன் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள்; தொடர்பில் கேட்டறிந்துகொண்ட அவர், புதிய ஆட்சியின் கீழ் இடம்பெறும் செயற்றிட்டங்கள் மற்றும் அபிவிருத்திப்பணிகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
அத்துடன், யுத்த சூழ்நிலை காரணமாக அதிகளவு கைம்பெண்கள் கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ள நிலையில் குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்ப தேவையான உதவிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது.
குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான முழு உதவிகனையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கும் எனவும் இங்கு உறுதியளிக்கப்பட்டது.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதக் குடியேற்றங்களை தடுப்பதற்கும் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பும் வகையிலான செயற்பாடுகளுக்கும் உதவுமாறு அமைப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவைப்பாடுகளை தி;ட்டங்களாக பதிவுசெய்து வழங்குமாறும் தாம் மீண்டு ஒருமுறை மாவட்டத்துக்கு வருகைதந்து தேவையான உதவிகள் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதாக உயர்ஸ்தானிகர் உறுதியளித்ததாக சிவில் சமூகத்தின் தலைவர் தெரிவித்தார்.
45 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago