2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'சுற்றுலாத்துறை அபிவிருத்தியால் உரிமை மீறப்பட்டுள்ளது'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,ஆர்.ஜெயஸ்ரீராம்  

சுற்றுலாத்துறையால் காணி மற்றும் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சொசயிட்டி போர் திரட்னன் பீப்பிள்ஸ் அமைப்பின் சுவிஸ் காணியுரிமை செயற்பாட்டாளர்  அலன் வூவி தெரிவித்தார்.

காணி உரிமை மற்றும் மனித உரிமை தொடர்பான செயலமர்வு, பாசிக்குடா நந்தவனம் சுற்றுலா  விடுதியில்  இன்று திங்கட்கிழமை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'சுற்றுலாத்துறை சம்மந்தமாக எந்தவொரு கலந்துரையாடலும் மக்களுடன் நடத்தப்படவில்லை. அதிக காணிகள் சூறையாடப்பட்டுள்ளன.

சிறு மீனவர்கள் பாதிப்பில் உள்ளனர். சாதாரண மக்களுக்கு எந்தவிதமான பலாபலனும் கிடைக்கவில்லை என்பதுடன், பாதுகாப்புப் படையினர் அதிகமான சுற்றுலா விடுதிகளை நடத்துகின்றனர் என்பது தொடர்பில் கடந்த 02 வருடங்களாக தான் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

சாதாரண மக்களின் காணி உரிமை மீறப்பட்டுள்ளது என்பதுடன், சுற்றுலாத்துறையானது மக்களின் நலனுக்கே ஆகும். ஆனால், இங்கு எதிர்மாறாகக் காணப்படுகின்றது.

இந்த மீனவர்களின் மனித உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே இவர்களது காணிகள் தொடர்பாக வெளிநாடுகளிலும் பேசியுள்ளேன்.

இந்த நிலை தொடருமானால் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பாசிக்குடாவுக்கு செல்வதை தடைசெய்ய நேரிடலாம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X