Suganthini Ratnam / 2016 ஜூன் 13 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
சில தொழில்களில் ஆண்களும் பெண்களும் சமமாகப் பணியாற்றுகின்றபோதிலும், பெண்களுக்கான சம்பளம் ஆண்களை விடவும் குறைவாகவே வழங்கப்படுகின்றது என பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவி சல்மா ஹம்சா தெரிவித்தார்
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் கிராமியமட்டத் தலைவிகளுக்கான கூட்டம், காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள தனியார்; பாடசாலை வளாகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தற்போது பெண்கள் செய்யும் தொழில்களில் வினைத்திறனுடன் ஈடுபடுவதைக் காணக் கூடியதாக உள்ளது. ஆனால், சிலர் பெண்களிடம் வேலைகளை வாங்கிவிட்டு, அவர்களுக்கு குறைந்த சம்பளத்தை வழங்குகின்றனர். இந்த நிலைமை மாற வேண்டும். பெண்கள் செய்யும் தொழில்களுக்கு ஏற்ப அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்பட வேண்டும்' என்றார்.
'ஆசிரிய சேவைகளிலும் அரசாங்கத் தொழில்களிலும் பெண்கள் அதிகளவில் கடமையாற்றுவதுடன், அரசாங்கம் அவர்களுக்கு ஆண்களைப் போன்று சமமான சம்பளத்தை வழங்குகின்றது. இந்த நிலைமை தனியார் துறைகளிலும் ஏற்பட வேண்டும். இங்கு பெண்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், பெண்கள் புறக்கணிப்படக் கூடாது. பெண்களுக்கான விழிப்புணர்வூட்டல்கள் மற்றும் அவர்களுக்கான தெளிவுகளை வழங்கும்போது பெண்களின் பங்களிப்பை சமூகம் பெற்றுக்கொள்ள முடியும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025