Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 29 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
அரசியல்வாதிகள் எல்லோரும் நல்லவர்கள். மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்ற நோக்கில் அரசியலுக்கு வருகின்றனர். ஆனால், வாக்காளர்கள்; பிழை விடுகின்றார்கள் என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் எழுதிய 'இலங்கை முஸ்லிம்களால் எதிர்கொள்ளப்படும் சவால்கள்' எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை ஓட்டமாவடி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'அனைத்து அரசியல்வாதிகளும் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்ற நோக்கில் அரசியலுக்கு வருகின்றார்கள். ஆனால், வாக்காளர்கள் அரசியல்வாதிகளை மிஞ்சியவர்களாக அவர்களை ஏமாற்றகின்ற வேலைகளை வாக்காளர்கள் செய்கின்றார்கள். தங்களது தேவைகள் முடிவடையவேண்டும் என்பதற்காக அரசியல்வாதியை ஆதரிப்பதாக கூறுவதும் அந்த விடயம் முடிவடைந்ததும் அவரை விமர்சிப்பவர்களாகவும் வாக்காளர்களர்கள் உள்ளனர். இவ்வாறான செயற்பாட்டின் காரணமாக தனது கருத்தினை அரசியல்வாதி வெளியிட்டால் அவர் தவறானவராக சித்தரிக்கப்படுகின்றார்.
தற்போது நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றது என்று கூறும் கருத்திற்கு நான் உடன்பாடு கிடையாது. நல்லாட்சி என்று சொல்வது நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நல்லது நடக்க வேண்டும். இன்று நாட்டில் பெரும்பான்மைச் சமுகத்தைச் சேர்ந்த இரண்டு பிரதான கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கின்றார்கள்.
20ஆவது அரசியல் சட்டம் அமுலுக்கு வரும் பட்சத்தில் தொகுதிவாரி தேர்தல் முறை வரும். அதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினை இல்லை. வட கிழக்குக்கு வெளியே உள்ள சிறுபான்மை சமுகத்தைச் சேர்ந்த மக்கள் பாதிப்டைவார்கள்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago