Suganthini Ratnam / 2016 ஜூன் 29 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்புச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினரும்; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு சிறைச்சாலையில் எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. சாதாரண கைதிகள்; 11 பேருடனையே ஓர் அறையில் அவர் இருந்துவருகின்றார் என அச்சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் என்.பிரபாகரன் தெரிவித்தார்.
உலக சித்திரவதை எதிர்ப்பு தினத்தையொட்டி 'மனித குலத்தின் பெருமையை மதிக்கும் ஒரு சமூகம்' எனும் தொனிப்பொருளில் செயலமர்வுஇ மட்டக்களப்பு கோப் இன் விடுதியின் கேட்போர் கூடத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் ஏற்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் இந்தச் செயலமர்வு நடத்தப்பட்டது.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்இ 'மட்டக்களப்புச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினரும்; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு குளிரூட்டப்பட்ட அறை வழங்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால்இ அவருக்கு அங்கு எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. சாதாரண கைதிகள்; 11 பேருடனையே ஓர் அறையில் அவர் இருந்துவருகின்றார். அவருக்கு எந்தவித பிரத்தியேக வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை' என்றார்.
'இருந்தபோதிலும்இ அவருக்கு வசதிகளை செய்து கொடுக்க முடியும். அதற்கான சட்டம் இருக்கின்றது. ஆனால்இ அவர் எந்த வசதியையும் சிறைச்சாலையிடம் கோரவில்லை. கைதிகள் அனைவருமே சமமாகவே நோக்கப்படுகின்றனர்' என்றார்.
'மட்டக்களப்புச் சிறைச்சாலையில் எந்த நபருக்கும் தனிப்பட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்பதுடன்இ சிறைச்சாலை சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே நாம்; செயற்பட்டு வருகின்றோம்' என்றார்.
'சிறைச்சாலைகள் சித்திரவதை கூடங்களாக அன்றிஇ குற்றம் இழைப்போருக்கு புனர்வாழ்வு அளிக்கும் பணியையே மேற்கொண்டு வருகின்றது.
சிறைச்சாலையைப் பொறுத்தவரையில் அங்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கையே மேற்கொள்ளப்படுகின்றது. அங்;கு சித்திரவதை மேற்கொள்ளப்படுவதில்லை. குற்றங்களை செய்தவர்கள் அங்கு வரும்போது அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் சில நடைமுறைகள் சட்டதிட்டங்களுக்கு அமைய பின்னபற்றப்படுகின்றன.
சிறைச்சாலையில் தொழில்பேட்டைகள் அமைக்கப்பட்டு தொழில்கள் வழங்கப்படுகின்றன. தொழி;ற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தண்டனைக்காலம் முடிந்து வீடு செல்லும்போது வங்கியில் பண வைப்புடன் வீடு செல்கின்றனர்' எனவும் அவர் மேலும் கூறினார்.


23 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
9 hours ago