Suganthini Ratnam / 2016 ஜூன் 27 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மனித வளங்களை தொழில் சந்தைக்குள் உள்வாங்கும் 'சமூக சந்தைப்படுத்தல்' என்ற புதிய திட்டத்தை எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அமுல்படுத்தவுள்ளதாக மட்டக்களப்பு சர்வோதய நிலையத்தின் சமூக சந்தைப்படுத்தல் திட்டத்துக்கான இணைப்பாளர் கே.யசோதரன் தெரிவித்தார்.
ஒரு வருட காலத்தைக் கொண்ட இத்திட்டத்துக்கு உலக கனேடிய பல்கலைக்கழக சேவை நிறுவனம் நிதி அனுசரணை வழங்கவுள்ளது.
கடந்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்கள், வேலை தேடுவோர், ஒதுக்கப்பட்ட சாரார் உள்ளிட்டோர் இத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படவுள்ளனர்.
எனவே, இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் சந்தைக்குள் உள்வாங்க விருப்பம் உடையவர்கள் மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் உள்ள சர்வோதய மாவட்ட பயிற்சிப் பாடசாலையில் 077 -7422690, 077 -3284976 என்ற அலைபேசி இலக்கங்கள் மூலமாக தொடர்புகொள்ள முடியும் என சர்வோதய நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.அப்துல் கரீம் தெரிவித்தார்.
24 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
9 hours ago